குருக்கள் மட மனித புதை குழி தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு

Batticaloa Eastern Province Kalmunai chemmani mass graves jaffna
By Rakshana MA Jul 22, 2025 09:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

குருக்கள் மட மனித புதை குழி குறித்த வழக்கு நேற்றைய தினம் (21) திறந்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது.

1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த தவணையில் சட்டமா அதிபர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை நீதிமன்றில் தோன்றுமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.

கந்தளாயில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

கந்தளாயில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

குருக்கள்மட புதைகுழி 

அதற்கமைவாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றிற்கு சமூகமளித்திருந்தனர்.

ஆனாலும் சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றில் எவரும் தோன்றியிருக்கவில்லை.

குருக்கள் மட மனித புதை குழி தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு | Kurukkamadam Mass Grave Case Kalmunai Trial

அதனை தொடர்ந்து, மன்றிற்கு சமர்ப்பணத்தை மேற்கொண்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி குருக்கள்மடம் மனிதப் படுகுழியானது முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமது அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருவதாகவும் குறித்த சந்தேகத்துக்கிடமான மனிதப் புதை குழி அமையப்பெற்றுள்ளதாக நியாயமாக நம்பப்படும் பிரதேசத்தைத் தோண்டுவதற்கான கட்டளையினை மன்று ஆக்குமிடத்து தாங்கள் அவதானிப்பாளர்களாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது!

மீள் திட்ட வரைபடம் 

மேற்படி சமர்ப்பணத்தை கருத்திற்கொண்ட நீதிமன்றம் குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான மீள் திட்ட வரைபை மன்றிற்குச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளையாக்கியதோடு அடுத்த தவணைத் தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் கட்டளை இடப்பட்டுள்ளது.

குருக்கள் மட மனித புதை குழி தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு | Kurukkamadam Mass Grave Case Kalmunai Trial

மேலும், குறித்த வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் ரவூப் சார்பில் குரல் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி முகைமீன் காலித் மற்றும் அதன் சட்டத்தரணிகளான முபாறக் முஅஸ்ஸம், ஹஸ்ஸான் றுஷ்தி, எஸ்.எம்.மனாருத்தீன், எப்.எச்.ஏ.அம்ஜாட், ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் நீதிமன்றில் தோன்றியிருந்தனர். குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுக்கின்ற இடையறாப் பயணத்தில் குரல்கள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனையில் மழைநீர் தேங்கி பிரச்சனை தீவிரம்! வலியுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்

அட்டாளைச்சேனையில் மழைநீர் தேங்கி பிரச்சனை தீவிரம்! வலியுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்

நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை

நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW