கந்தளாயில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாய் குளம் மற்றும் சுற்றுப்புறம் இன்று (21) தூய்மைப்படுத்தப்பட்டது.
"கிளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய நீர்வளமாகத் திகழும் கந்தளாய் குளத்தின் கரையோரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கான சூழலைத் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சிரமதான பணி
கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ்.பண்டார தலைமையில் இந்த மாபெரும் சிரமதானப் பணி நடைபெற்றது.
அதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, இப்பகுதியில் வீசப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என்பன அகற்றப்பட்டு, நீர்த்தேக்கத்தின் இயற்கை அழகும், சுகாதாரமும் பேணப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




