கேள்விக்குறியாகும் சஜித்தின் பதவி : சதிகள் குறித்து எச்சரிக்கும் முஜிபுர் ரஹ்மான்

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Mujibur Rahman
By Rakshana MA Jul 21, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றுவதற்கான உள் நடவடிக்கை குறித்த வதந்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அதே நேரத்தில் கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த திட்டமிட்ட சதித்திட்டம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து கட்சிக்குள் எந்த விவாதமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையின் கல்வி சீர்திருத்தத்திற்கு வெளியாகும் எதிர்ப்புகள்

இலங்கையின் கல்வி சீர்திருத்தத்திற்கு வெளியாகும் எதிர்ப்புகள்

மறுக்கப்படும் வதந்திகள் 

இருப்பினும், கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக அழிக்க சில கூறுகள் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்விக்குறியாகும் சஜித்தின் பதவி : சதிகள் குறித்து எச்சரிக்கும் முஜிபுர் ரஹ்மான் | Mujibur Denies Sajith Ouster Rumors

இந்தக் கூறுகள் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செயல்படுவதாகத் தெரிகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், புதிய கூட்டணிகள் குறித்தும் ரஹ்மான் கருத்து தெரிவித்தார், தயாசிறி ஜெயசேகரா போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளைக் கொண்டுவருவது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தயாசிறி ஒரு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. அவரைப் போன்றவர்களை கட்சிக்குள் வருவது கட்சியை பலப்படுத்தும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டம்!

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டம்!

கடல் நடுவே தத்தளித்த 3 கடற்றொழிலாளர்கள் மீட்பு

கடல் நடுவே தத்தளித்த 3 கடற்றொழிலாளர்கள் மீட்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW