முஸ்லிம் புதைகுழிகளை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

Batticaloa Eastern Province Death
By Rakshana MA Jun 30, 2025 09:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் குருக்கள் மடத்தில், விடுதலைப்புலிகளால்,1990ம் ஆண்டில், கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் 1990ல் முறிந்து மீண்டும் போர் ஆரம்பமான போது விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில், 1990ம் ஆண்டு ஜுன் மாதம் மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

பொலிஸ் முறைப்பாடு

படுகொலை செய்யப்பபட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் அண்மையில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்.

முஸ்லிம் புதைகுழிகளை தோண்ட நீதிமன்றம் உத்தரவு | Kurukkalmadam Mass Grave Dig Order

காத்தான்குடி நகர சபை உறுப்பினரான மஜீத் ஏ.றவூப் தனது உறவினர்கள் இருவர் தொடர்பாக செய்த முறைப்பாடு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

தமது உறவினர்கள் இருவர் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என றவூப் ஏ.மஜீத் பொலிஸ் விசாரனையில் தான் தெரிவித்தாக கூறியுள்ளார்.

சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவரால் அடையாளம் காட்டப்பட்ட கடலோரப் பகுதியில் தற்போது பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகன குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் இஸ்ரேலாக மாறவுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு

ஆசியாவின் இஸ்ரேலாக மாறவுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு

படுகொலை செய்யப்பட்டவர்கள்...

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அமர்வின் போதும் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பலரும் இது தொடர்பாக சாட்சியமளித்திருந்தார்கள்.

முஸ்லிம் புதைகுழிகளை தோண்ட நீதிமன்றம் உத்தரவு | Kurukkalmadam Mass Grave Dig Order

சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்ய ஆணைக்குழு உதவ வேண்டும் என அந்த அமர்வின் போது சாட்சியமளித்தவர்கள் கோரினர்.

இதனையடுத்து இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடலோரப் பகுதியை ஆணைக்குழு தலைவர் உட்பட பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு

போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery