பிள்ளையானின் துப்பாக்கிதாரி கைது!
பிள்ளையான் (Pillayan) என்று அறியப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் கட்டளைப்படி இடம்பெற்றன என்று கருதப்படும் கொலைகளுக்கு துப்பாக்கிதாரியாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானின் நெருங்கிய சகாவான முஹமட் ஷாகித் என்பவரையே நேற்று புதன்கிழமை (13) காத்தான்குடியிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்தனர் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சி.ஐ.டியினர் அவரை கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
அவரின் கைதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான பலர் கைதாகி வருகின்றனர். இந்த நிலையிலேயே முஹமட் ஷாகித் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதேசமயம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடியில் தனியாக இருந்த பெண்ணின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட முயன்றுள்ளார்.
அப்போது, தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |