கிண்ணியாவில் முன்னெடுக்கப்பட்ட 25வது கந்தூரி வைபவம்
கிண்ணியாவில் அஸ்செய்த் அப்துல் காதர் சூஃபி வலியுல்லாஹ் அவர்களின் 189 ஆவது வருட மௌலிது மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வும், 25 ஆவது சுனனுத் திர்மிதி தமாம் கந்தூரி வைபவமும் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (25.05.2025) கிண்ணியா மாஞ்சோலை அஸ்செய்த் அப்துல் காதர் சூஃபி வலியுல்லாஹ் வளாகத்தில் நடைபெற்றது.
கந்தூரி வைபவம்
கிண்ணியா சுனனுத் திர்மிதி தரிக்கா அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எஸ்.எம். பைசல் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில், விசேட மார்க்க சொற்பொழிவினை கலிபதுஸ் சாஹபி அஹமத் சூபி நிகழ்த்தி வைத்தார்.
நாட்டின் நிலையான பொருளாதார அபிவிருத்தியும், சமூகங்களுக்கிடையே அமைதியான வாழ்வுக்கும் ஏற்பட வேண்டுமென இங்கு விசேட துவா பிரார்த்தனையும் உலமாக்களால் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன், இந்த வைபவத்தில், சிறப்பு அதிதியாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்துகொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |