கல்முனையில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுப்பு
கல்முனை வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பராட்டு நிகழ்வானது, கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (24) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
கௌரவிக்கும் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வானது Sparkling Scholars - 2024 எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.
அத்துடன், கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.றியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










