கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா வரலாறு நூலுருவாக்கம்
கல்முனையில் (Kalmunai) நம்பிக்கையாளர் சபையினருக்கும், மரபுரிமை ஆய்வு வட்டத்தினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி, கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் வறியப்படுத்தப்படாத வரலாற்றை நூலுருவாக்கம் செய்யும் பணி நம்பிக்கையாளர் சபையின் மேற்பார்வையில் மரபுரிமை ஆய்வு வட்டம் அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இவ்வரலாற்று தொகுப்பும், நூலுருவாக்கமும் தொடர்பில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் மற்றும் மரபுரிமை ஆய்வு வட்டத்தினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வானது பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
வரலாறு நூலுருவாக்கம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கல்முனையின் வரலாற்று அடித்தளமாக விளங்கும் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் பண்பாட்டு, சமய மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறைகளுக்குப் பாதுகாக்கும் நோக்கில், துல்லியமான வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் பணிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், விரைவில் பொது மக்களின் பங்களிப்பின் மூலம் தகவல் திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









