கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம்

Ampara Eastern Province Kalmunai
By Laksi Oct 15, 2024 01:52 PM GMT
Laksi

Laksi

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எப்.இஸட்.சராப்டீன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கல்முனை Green Field வீட்டுத்திட்ட சுற்றுச்சூழல் மற்றும் அதனை அண்டியுள்ள வாய்க்கால் என்பன சிரமதானம் ஊடாக துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.

அம்பாறையில் மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண்

அம்பாறையில் மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண்

சிரமதானப் பணி

குறித்த வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலிலும் அங்குள்ள வாய்க்கால்களிலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிவருகின்றனர். இந்த செயற்பாட்டினை தடுக்கும் பொருட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் | Kalmunai Green Field Housing Project Program

அந்தவகையில் பிராந்திய பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் எம்மால் கடந்த சனிக்கிழமை (12) முதல் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தோம்.

கல்முனை மாநகர சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கல்முனை பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் குறித்த சிரமதானப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

விசேட வேலைத்திட்டம்

இதேவேளை Green Field வீட்டுத்திட்ட சுகாதார கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அங்குள்ளவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அதனை முறையாக மேற்கொள்வதற்குரிய பேக் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் | Kalmunai Green Field Housing Project Program

இந்த சிரமதான நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் உள்ளிட்டவர்களுடன் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் உழியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர் .அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery