கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்

Ampara Eastern Province Kalmunai
By Laksi Oct 15, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

கல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

முன்மொழிவுகள்

அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல் | Proposals For Budget Of Kalmunai Municipal Council

இந்நிலையில், கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி சிறந்ததொரு சாத்தியப்பாடான பட்ஜெட்டை தயாரித்து, மாநகர சபையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW