வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
எந்தவொரு வகையிலும் கட்டணச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (15) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
வாகன இறக்குமதி
அதற்கான அமைச்சரவை முடிவு ஏற்கனவே உள்ளது. ஆனால் நாங்கள் வாகனங்களை திடீரென இறக்குமதி செய்யவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின் வரிச்சலுகை தரும் வாகனங்களை கொண்டு வரவில்லை. ஆனால், வாகனங்களின் இறக்குமதி சரியான முறைக்கு உட்பட்டு, நமது டொலர் தொகை இழுபறியாகாமல் இருக்க வேண்டும்.
இதனால் நமக்கு மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாது. மேலும், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய சில வாய்ப்புக்களையும் வழங்குவோம் என்று நம்புகிறோம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |