மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுபவராக திகழும் அநுர : எஸ்.எம் சபீஸ்

Srilanka Muslim Congress Anura Kumara Dissanayaka Sri Lanka General Election 2024
By Laksi Oct 15, 2024 08:10 AM GMT
Laksi

Laksi

எம்மை ஆளுகிறவர்கள் தகுதியானவர்களாக ஊழல்வாதிகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை வெற்றிபெற செய்துள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக கைகோர்த்த அரச ஊழியர்களுக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கல்வி மற்றும் பொருளாதார மாற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வரும் நான் ஏழை மக்களின் உயர்தர வாழ்விற்காக தான் அர்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

நாடாளுமன்ற தேர்தல்

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், கல்வி திட்ட மாற்றத்திற்காகவும் தேசிய நலனில் அக்கறை கொண்டவராகவும், பள்ளிவாசல் தலைமை ஊடாக வாலிபர்களை வழிப்படுத்தியவராகவும் தொழில் புரட்சி ஏற்படுத்தவும் அதன்மூலம் மக்களின் உயர்தர வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிப்பவராகவும் என்னை நீங்கள் கடந்த 5 வருடமாக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளீர்கள்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுபவராக திகழும் அநுர : எஸ்.எம் சபீஸ் | Sri Lanka President Anura Kumara Dissanayake

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது போன்று இந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எமது மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும் எனது வெற்றிக்காகவும் பாடுபட முன்வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கோட்டை - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்ட தொடருந்து

கோட்டை - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்ட தொடருந்து

ஜனாதிபதிக்கு 7 நாட்கள் காலக்கெடுவை விதித்துள்ள உதய கம்மன்பில

ஜனாதிபதிக்கு 7 நாட்கள் காலக்கெடுவை விதித்துள்ள உதய கம்மன்பில

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW