இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Climate Change
Weather
By Laksi
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,657 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய்
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை , கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |