திருகோணமலையில் வேட்புமனுவினை தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வேட்பு மனுவினை இன்று (11) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
வீட்டு சின்னத்தில் போட்டி
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ச.குகதாசன் தலைமையிலான குழுவினர், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
வடகிழக்கில் இம் மாவட்டத்தில் மாத்திரம் இணைந்து கூட்டணியாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம். எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளோடு இணைந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
தமிழ் சமூகம்
ஓரணியாக இணைந்தால் தான் இரண்டு ஆசனங்களையாவது பெற முடியும். கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.எனவே, தான் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கூட்டணியாக இணைந்துள்ளோம்.
கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பாதிப்படைந்த தமிழ் சமூகம் இவ்வாறான விடயங்களில் தமிழ் தேசியத்தை பாதுகாக்க ஒற்றுமையாக செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |