கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Weather
By Mayuri Oct 11, 2024 05:20 AM GMT

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொந்தளிப்பாக காணப்படும் கடற்பகுதி

அத்துடன், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW