வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம்

Sri Lanka Passport
By Rakshana MA Oct 21, 2024 11:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்றிலிருந்து (21) கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெளிநாட்டிலிருந்து ஒரு தொகுதி கடவுச்சீட்டு நாட்டை வந்தடைந்துள்ளதால் இன்றிலிருந்து விநியோகம் நடைபெறும் .

மீண்டும் வரிசையில் நிற்கும் அபாயம்

மேலும் விண்ணப்பிக்கப்பட்ட 750,000 கடவுச்சீட்டுக்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயமும் உண்டு என்பதனால் மீண்டும் கடவுச்சீட்டுக்கு நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம் | Issue Of Return Passport To Normal Vijitha Herath

மேலும் அதிக கடவுச்சீட்டுக்களை விலை மனுக்கோரல் முறையின் படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில் அது தொடர்பான சரியான தீர்வொன்று வெளியானவுடன் ஈ - பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஸாஹிரா பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு

ஸாஹிரா பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW