ஸாஹிரா பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு
கல்முனை கல்வி வலய கல்/ ஸாஹிரா தேசிய பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு ஸாஹிரா பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுகள் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எம்.எச். ஜாபீர் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் எதிர்கால பவள விழா தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் பாடசாலை அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள், சங்க செயலாளர் சட்டத்தரணி ஸஹ்பி எச். இஸ்மாயில், உப தலைவர் பொறியியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான், பொருளாளர் தொழிலதிபர் என்.எம். றிஸ்மீர் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
32 அணிகள் பங்குபற்றுகின்ற ஸாஹிரா பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் பகல், இரவு போட்டிகளாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஸஹிரியன்ஸ் நடைபவனி
பாடசாலை தேவைகளுக்கான பேருந்து கொள்வனவுக்கு நிதியம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் இணைந்ததாக பவள விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள “ஸஹிரியன்ஸ் நடைபவனி” நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கலந்து கொள்ள வேண்டும் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ஸஹிரியன்ஸ் நடைபவனி நிகழ்வினை முன்னிட்டு டீ சேர்ட்டுக்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |