தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையில் ஆரம்பிக்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவினை இடைநிறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனம் என்பதற்கமையவும், இத்திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்ற அடிப்படையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எழுத்து மூலமான அறிக்கை
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.குமநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் வலியுறுத்திய விடயங்கள் குறிப்பிடத்தக்கவை. அவையாவன,
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் செயலிழந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் இணைத்தலைமையின் கீழ் தொடர்வதற்கான பொறிமுறைகளை தயார் செய்ய வேண்டும்”.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நோக்கம், 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், மேற்பார்வையிடவும் மற்றும் மீளாய்வு செய்யவும் ஆகும்.
ஆனால் இக்குழு சுறுசுறுப்பாக செயல்படாததன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட திட்டமானது முழுமையடையாமலே நிறுத்தப்ப்டடுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |