காசாவிற்கு உதவி விநியோகங்களைத் தடுக்கும் இஸ்ரேல்

Israel Israel-Hamas War Gaza
By Rakshana MA Mar 09, 2025 04:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

காசாவுக்கான உதவியை ஏழாவது நாளாக இஸ்ரேல நிறுத்தியுள்ளதன் மூலம் இஸ்ரேல் "கூட்டு தண்டனை என்ற போர்க்குற்றத்தைச் செய்துள்ளது" என்று பாலஸ்தீனிய குழு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இது அங்கு இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய கைதிகளையும் பாதித்ததாகக் கூறியுள்ளது.

இதுபோன்ற ஒரு குற்றத்தின் விளைவுகள் காசாவில் உள்ள எங்கள் மக்களைத் தாண்டி, எதிர்ப்பாளர்களால் பிடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கைதிகளும், உணவு, மருந்து மற்றும் சுகாதாரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஹமாஸ் கூறியுள்ளது.

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

உதவித் தடை

உதவித் தடையின் விளைவுகளுக்கு நெதன்யாகு "முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று அந்த இயக்கம் கூறியதுடன், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது அவர் "அலட்சியம்" காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காசாவிற்கு உதவி விநியோகங்களைத் தடுக்கும் இஸ்ரேல் | Israel Stoped Aid To Gaza

15 மாதங்களுக்கும் மேலான சண்டையை பெருமளவில் நிறுத்திய போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அதன் நிபந்தனைகளை பாலஸ்தீன போராளிகள் ஏற்றுக்கொள்ளும் வரை, காசாவிற்கு உதவி விநியோகங்களைத் தடுப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சாய்ந்தமருதுவில் இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி கௌரவிப்பு

சாய்ந்தமருதுவில் இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி கௌரவிப்பு

ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW