சாய்ந்தமருதுவில் இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி கௌரவிப்பு

Sri Lankan Peoples Eastern Province Women
By Rakshana MA Mar 08, 2025 11:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

பெண்களை போற்றும் விதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா சாரிக் காரியப்பருக்கு இன்று(08) சாய்ந்தமருதுவில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி வங்கி சங்கத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

சர்வதேச மகளிர் தினம் 

மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பொறுப்பு முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சாய்ந்தமருதுவில் இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி கௌரவிப்பு | Honoring Srilanka Muslim Bar Leader On Women S Day

பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு இல்லாத சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்றவை கிடைத்திட சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய விழிப்புணர்வை சர்வதேச மகளிர் தினம் வலியுறுத்துகின்றது. 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery