ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero
By Rakshana MA Mar 08, 2025 05:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை விசாரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவரின் கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு | Complaint Filed Cid Against Venerable Gnanasara

இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கும் என உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் தேரரின் இந்த அறிவிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையும் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் போட்டி

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் போட்டி

அதிரடி சுற்றிவளைப்பில் கைதான அரச ஊழியர்! சிவில் உடையில் பொலிஸார் நடவடிக்கை

அதிரடி சுற்றிவளைப்பில் கைதான அரச ஊழியர்! சிவில் உடையில் பொலிஸார் நடவடிக்கை

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW