இஸ்ரேலின் தாக்குதலில் பெண் மருத்துவரும் 9 பிள்ளைகளும் பலி..!
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Rakshana MA
காசா மீதான, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில், பெண் மருத்துவர் ஒருவரும் 9 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண் மருத்துவர் பணி புரிந்த, கான் யூனிஸ் நகரில் உள்ள மருத்துவமனை, இதனை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், மருத்துவர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகளில் ஒருவரும் அவரது கணவரும் காயமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சகம்
எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு என்ற தகவல் தொடர்பில், மதிப்பாய்வு செய்யப்படுவதாக, இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.
இதேவேளை, நேற்று (24) நண்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தால் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |