காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

Ramadan Israel Palestine Israel-Hamas War
By Rakshana MA Mar 02, 2025 09:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

ரமழான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல்(Israel) ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் (Palestine) காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 இல் தாக்குதல் மேற்கொண்டது.

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுகாதார சேவை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீட்டு முறைமை அறிமுகம்

சுகாதார சேவை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீட்டு முறைமை அறிமுகம்

முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வந்ததுடன் நேற்றுடன் நிறைவடைந்தது.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல் | Israel Approves Temporary Ceasefire For Ramadan

இந்நிலையில், ரமழான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

ரமழான் மாதம்

போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் நிறைவுபெற்றுள்ள தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும்.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல் | Israel Approves Temporary Ceasefire For Ramadan

ரமழான் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் மாதத்தை வரவேற்கிறார்கள்.

இதனால் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது' என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம்

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம்

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW