சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம்

Sri Lankan Peoples Sammanthurai Department Of Wildlife
By Rakshana MA Mar 02, 2025 06:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறைப்பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அறுவடைக்கான இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில் அப்பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில்  நரிகள் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

நடமாடும் நரிகள் 

இவை இலங்கை நரிகள்(Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ளநரிகள் என அழைக்கப்படும், Canis aureus naria எனப்படும் வகை நரிகள் என குறிப்பிடப்படுகின்றது.  

அறுவடைக்கு பின்னரான வயற்காட்டின் தோற்றம் நரியின் உடல் நிறத்திற்கு ஒப்பாக காணப்படுவதால் வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம் | Increased Fox Activity In The Sammanthurai Area

எனினும், நரிகள் மயில்கள் போன்றன பீடைகளைக் கட்டுப்படுத்தியும், மற்ற சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரமழான் நோன்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரமழான் நோன்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தேங்காய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery