கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

Trincomalee Eastern University of Sri Lanka Sri Lanka SL Protest
By Rakshana MA Mar 01, 2025 06:32 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு பல்கலைக்கழக (Eastern University Sri Lanka) மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை (Trincomalee) வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

விடுதி தொடர்பான குறைபாடுகள்

திருகோணமலை வளாகத்தில் காணப்படும் விடுதி தொடர்பான குறைபாடுகள், உணவருந்துவதற்கன தொகுதி மற்றும் மலசலகூடம் தொடர்பான குறைபாடுகள் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு | Protest By Eastern University Students

இந்தநிலையில், குரல்கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு இரு வாரங்களுக்கு கல்வித் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த வளாகத்திற்கு முன்பாக மாணவர்களால் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு | Protest By Eastern University Students

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தின் இறுதி கைதி பறிமாற்றம் இன்று!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தின் இறுதி கைதி பறிமாற்றம் இன்று!

காலி முகத்திடலில் காட்சிப்படுத்திய வாகனங்களுக்கு என்ன ஆனது..

காலி முகத்திடலில் காட்சிப்படுத்திய வாகனங்களுக்கு என்ன ஆனது..

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW