கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு!

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Kiyas Shafe Mar 11, 2025 11:11 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று (11)கிண்ணியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் பிரதேச செயலகேட்போர்கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ள பக்கீர்வைத் பாரம்பரியம், களிகம்பு மற்றும் ஹஸீதா ஆகிய 3 நூல்களே கலைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

கிண்ணியா முன்னோடிகள் 

நிகழ்வின் வரவேற்புரையை எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா நிகழ்த்திய அதேவேளை, நூலறிமுகத்தை இலக்கிய ஆர்வலர் எம்.எஸ்.எம்.நியாஸ், எழுத்தாளர் பீ.ரீ.அஸீஸ், எழுத்தாளர் முகைமினா மூஸா நிகழ்த்தியுள்ளார்.

கிண்ணியாவில் இஸ்லாமிய பாரம்பரிய கலைகளின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு! | Islamic Cultural Books Released

கிண்ணியா முன்னோடிகள் கலை, இலக்கிய வட்டமும், கிண்ணியா பிரதேச செயலக கலாசாரப் பிரிவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், பிரதம அதிதியாக கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம் முஸ்இல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இறக்குமதியான வாகனங்கள் மீள் ஏற்றுமதியா..! வெளியான பின்புலம்

இறக்குமதியான வாகனங்கள் மீள் ஏற்றுமதியா..! வெளியான பின்புலம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery