அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
அம்பாறை(Ampara) மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, அக்கரைப்பற்று தனியார் விடுதி ஒன்றில் நேற்று(09) இடம்பெற்றுள்ளது.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பில், அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரீதியான பிரச்சினை MN சம்பளக் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில் கடமை ரீதியான விடயங்கள் மேலும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியான சேவைப் பிரமானக் குறிப்பை உருவாக்குதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத் தருவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சட்டத்தரணி அனுராத செனவிரத்தன,செயலாளர் வசந்த லங்கதிலக்க உள்ளிட்ட திணைக்களங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













