தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பதற்கான நேர்முக பரீட்சை
மாற்றுத்திறனாளிகளை 2025/2026 தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.
குறித்த பரீட்சையானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
நேர்முக பரீட்சை
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் தொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள மாற்றுதிறனாளிகள் இந்நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |