சூறாவளியாக மாறும் சாத்தியக்கூறு : மக்களுக்கான எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province TN Weather Weather
By Rakshana MA Nov 27, 2024 04:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் கிழக்கில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நேற்று (26) 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில், வடக்கு - வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று (நவம்பர் 27ஆம் திகதி) ஒருசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதி: இஸ்ரேல் போர் நிறுத்தலுக்கு ஒப்புதல் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் அமைதி: இஸ்ரேல் போர் நிறுத்தலுக்கு ஒப்புதல் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

சூறாவளிக்கான சாத்தியம்

மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சூறாவளியாக மாறும் சாத்தியக்கூறு : மக்களுக்கான எச்சரிக்கை | Climate Change In Eastern Province Sl

தொடர்ந்தும் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பிரான்ஸுக்கு அனுப்புவதாக ரஷ்ய இராணுவத்திற்கு விற்கப்பட்ட யாழ்.இளைஞர்கள் : அச்சத்தில் உறவினர்கள்

பிரான்ஸுக்கு அனுப்புவதாக ரஷ்ய இராணுவத்திற்கு விற்கப்பட்ட யாழ்.இளைஞர்கள் : அச்சத்தில் உறவினர்கள்

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW