வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்: ஆறு பேர் சடலங்களாக மீட்பு

Batticaloa Climate Change Eastern Province Weather
By Laksi 4 months ago
Laksi

Laksi

புதிய இணைப்பு

காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர்.

தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

உயிரிழப்பு

இந்நநிலையில், நேற்றையதினம் (27) நான்கு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்: ஆறு பேர் சடலங்களாக மீட்பு | 5 People Are Missing In Floods In Batticaloa

இதனையடுத்து, இன்று (28) மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,குறித்த சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்காம் இணைப்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட  மத்ரஸா மாணவர்களில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

வடக்கு- கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு- கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தகப் பை மீட்பு

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன், ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்: ஆறு பேர் சடலங்களாக மீட்பு | 5 People Are Missing In Floods In Batticaloa

இதே வேளை காணாமல் சென்ற தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப் பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இணைப்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டு வருகின்றன.

சடலம் மீட்பு

தற்போது மீட்கப்பட்ட சடலம் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

[

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

புதிய இணைப்பு அம்பாறை - மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் காணமல்போயுள்ள ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த ஆறு மாணவர்களை தேடும் பணிகள் இன்று (27.11.2024) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.

சூறாவளியாக மாறும் சாத்தியக்கூறு : மக்களுக்கான எச்சரிக்கை

சூறாவளியாக மாறும் சாத்தியக்கூறு : மக்களுக்கான எச்சரிக்கை

இரண்டாம் இணைப்பு

காரைத்தீவு- மாவடிபள்ளி பகுதியில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த விடயத்தை அம்பாறை (Ampara) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்பில் மேலும் தெரியவருகையில், உழவு வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் குறித்த ஏழு பேரும் காணாமல் போயியுள்ளனர்.

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

மீட்கும் நடவடிக்கை

இதில், இரண்டு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்: ஆறு பேர் சடலங்களாக மீட்பு | 5 People Are Missing In Floods In Batticaloa

எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

மேலும், காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : மக்களுக்கான எச்சரிக்கை

கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : மக்களுக்கான எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery