வடக்கு- கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Laksi Nov 28, 2024 03:32 AM GMT
Laksi

Laksi

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடைய கரையோர பகுதிகளில் இன்று (28) காற்றினுடைய வேகம் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (27) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம்: இருவர் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம்: இருவர் சடலமாக மீட்பு

கனமழை

தற்போது தொடரும் கனமழை இன்று (28) நண்பகல் நிறைவு பெற்றாலும் கூட இடையிடையே கனமழை முதல் மிக கனமழை திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

வடக்கு- கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Becoming Dangerous In North East

எதிர்வரும் 30ஆம் திகதி அளவில் இந்த புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கின்ற போது வடக்கு மாகாணத்தினுடைய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கு சற்று வேகமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை

மக்களுக்கு அறிவுறுத்தல்

தொடர்ச்சியாக கிடைத்து வருகின்ற கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய பல தரை மேற்பரப்பு நீர்நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் மேலதிக நீர் வான் கதவுகளூடாகவும் வான் ஊடாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

வடக்கு- கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyclone Becoming Dangerous In North East

எனவே மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் எனவும் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டடம்

சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டடம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW