கல்முனையில் உள்ள முக்கிய பாலம் பாலம் சேதம்: சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Ampara
Climate Change
Eastern Province
Kalmunai
Weather
By Laksi
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள முக்கிய பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நிந்தவூர் - மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் உள்ள பிரதான வீதியில் இருக்கும் பாலமே வெள்ளப் பெருக்கு காரணமாக உடைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
இந்நிலையில், வாகன சாரதிகளை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |