இரவில் வாகனங்களை நிறுத்தும் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இரவு நேரங்களில் கடமையிலுள்ள போது வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
வாகன சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொலிஸார் பிரதிபலிப்பாக ஒளிரும் மேலாடை மற்றும் ஒளிரும் கையுறைகளை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்பணிக்காக பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின்சூழ் (Torchlight) முடிந்தவரை பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெடுப்புகள்
இரவு நேரப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இதனை உரிய வகையில் கடைப்பிடிக்கிறார்களா என்பதைத் தொடர்ச்சியாக கண்காணிக்குமாறும் தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும், இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து கடமை உத்தியோகத்தர்கள் பல்வேறு வகையான மின்சூழை பயன்படுத்துவதால் வாகனத்தை செலுத்துவோர் சில சந்தர்ப்பங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளவாதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிபலிக்கும் மேலங்கிகளை அணியாதிருப்பதன் காரணமாக, விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |