பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

Ampara Elephant Department Of Wildlife
By Rakshana MA Jan 18, 2025 07:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்துவில், விக்டர் ஏத்தம் பிரதேச பிரதான வீதியோரத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த காட்டு யானையானது நேற்று(17) காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடித்திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு!

மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு!

யானைகள் நடமாட்டம் 

மேலும், இந்த இறப்பு தொடர்பிலான காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாமெனவும் அஞ்சப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை | Inquiry Into The Death Of A Wild Elephant In Sl

இந்த நிலையில், அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணமும் காணப்படுகின்றதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW