அம்பாறையில் ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று

Advanced Agri Farmers Mission Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Mar 19, 2025 09:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்லோயா ஆற்றுப் பிரிவின் யாலபோக(சிறுபோகம்) நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று(19) திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயேவிக்ரம தலைமையில் நடைபெற்றுள்ளது.

காசா மீதான தாக்குதல்கள் 'ஆரம்பம் மட்டுமே' நெதன்யாகுவின் எச்சரிக்கை

காசா மீதான தாக்குதல்கள் 'ஆரம்பம் மட்டுமே' நெதன்யாகுவின் எச்சரிக்கை

விவசாய குழு கூட்டம்

குறித்த குழுக்கூட்டத்தில் சிறுபோகத்திற்கான விதைப்புகாலம், நிர்விநியோகம், பயிர்காப்புறுதி, விதைக்கும் நெல்லினம், மாடுகளை அப்புறப்படுத்தல், கிளை வாய்க்கால் துப்பரவு போன்ற விடயங்களுக்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்முனை நீர்பாசன திணைக்கள பிரிவில் 13263 ஏக்கர் காணிகளும் அக்கரைப்பற்று நீர்பாசன காரியாலயத்தில் வீரயடி பிரிவில் 4558 ஏக்கர் காணிகளும், சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 22218 ஏக்கர் காணிகளும் இம்முறை சிறுபோக விவசாய செய்கைக்காக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று | Initial Agricultural Committee Meeting Today

மேற்படி கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.டி.எம் இர்பான், இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் ரஸ்ஸான்(நளிமி), நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு

தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery