கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்முனை(Kalmunai) ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு கல்லூரியின் கலாச்சார குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நேற்று(18) நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
இந்நிலையில், இப்தார் சிந்தனையை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை பிரிவு தலைவர் அஷ்ஷெய்க். முர்ஷித் முப்தியினால் (ஸஃதி, நஜ்மி) நிகழ்த்தப்பட்டுள்ளது.
பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் விசேட உரை மற்றும் இராப்போஷணத்துடன் வருடாந்த இப்தார் நிகழ்வு நிறைவடைந்துள்ளது.
அத்தோடு இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பக்கீர் ரம்ஸீன், கல்முனை கல்வி வலய கணக்காளர் கே.லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






