ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 08:16 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் தெடர்பில் கடந்த 24 மணி நேரத்தில்  269 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை 5, 214 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 1,656 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,415 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

முறைப்பாடுகள் 

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள் | Increasing Election Complaints

இதேவேளை, இதுவரையில் தங்களது கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 4,680 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எஞ்சிய 534 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW