சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 20, 2024 05:51 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு | Election In Sri Lanka

இதற்காக 63,000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3,000க்கும் அதிகமான இராணுவ சிப்பாய்களும், 2,500க்கும் அதிகமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும், அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW