நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Kandy Sri Lanka School Children
By Laksi Oct 03, 2024 06:25 AM GMT
Laksi

Laksi

முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பல் மருத்துவப் பிரிவின் பேராசிரியர் திலிப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் 10 வருடங்களுக்கு ஒருமுறை வாய்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வாய் நோய்கள் 

இந்த நாட்களில் 2024-2025 ஆண்டுக்கான ஆய்வுகள் இடம்பெறுகின்றன. இதன் ஊடாக 5 வயது குழந்தைகளுக்கு 63% வாய் நோய்கள் இருப்பதைக் காண்டறிய முடிந்துள்ளது.

நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Increase In Dental Diseases In Sl Children

அதாவது 100 குழந்தைகளை எடுத்துக் கொண்டால் 63 பேருக்கு பற்களில் துவாரம் உள்ளது. 10 குழந்தைகளை எடுத்தால் 6 பேருக்கு உண்டு. 12 வயதிற்குள், இது கணிசமாகக் குறைந்துள்ளது.இந்த 63% வீதத்தை பாடசாலை வருவதற்கு முன்பே 55% வரை கொண்டு வர முடிந்தால் அது பெரிய விடயம்.

இதனை எளிமையாக செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை, குளோரைட் இல்லாத பற்பசை மூலம் பல் துலக்கவும்.சரியான துலக்குதல் நுட்பத்தை கற்றுக்கொடுங்கள் மற்றும் இனிப்பு உணவுகளை குறைக்கவும். முடிந்தவரை இனிப்புக்களை பிரதான உணவின் போது மாத்திரம் மட்டுப்படுத்தினால் அது எளிதானது." என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW