நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Colombo Jaffna Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Laksi Oct 08, 2024 09:25 AM GMT

ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 698 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில்  40,109 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,957 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

டெங்கு மரணங்கள்

அத்தோடு, வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,802 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,151 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,059 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை! | Increase In Dengue Cases In First Week Of October

மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW