சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

Ampara Srilanka Muslim Congress Eastern Province General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 08, 2024 07:51 AM GMT
Laksi

Laksi

சம்மாந்துறை மக்கள் புதிய மாற்றங்களை விரும்பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஆதரிக்க தயாராக உள்ளனர் என அந்த கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உருவாகப்போகும் நாடாளுமன்றத்தில் எங்கள் மாவட்ட மக்களின் சார்பாக குரல்கள் நிச்சயம் ஒலிக்க வேண்டும்.

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பொதுத் தேர்தல்

இந்த தேர்தலில், சம்மாந்துறை மக்களும், மாவட்ட மக்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து வலுச் சேர்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு | Sammanthurai Peoples Support For Slmc

மேலும், சம்மாந்துறை தொகுதி இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடாக பெறுவதற்கான விரிவான வியூகம் மற்றும் மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய கருத்துக்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்தநிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பல ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery