மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கி வைப்பு

Sri Lanka Climate Change Eastern Province Kalmunai Floods In Sri Lanka
By Rakshana MA Dec 11, 2024 06:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வொலிவேரியன் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று(10) இடம்பெற்றது.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பயிர்ச்செய்கை விதை..

சாய்ந்தமருது விவசாயத் திணைக்களம் மற்றும் கல்முனை தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கி வைப்பு | Improving People S Livelihood

இதன்போது மேலும் வீட்டுத் தோட்டத்தினை எவ்வாறு விருத்தி செய்வது தொடர்பான பூரண விளக்கம் விவசாய திணைக்கள உத்தியோகத்தரினால் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ தாதிகள் கலந்து கொண்டனர்.

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery