வானில் நிகழவுள்ள மாற்றம் : இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Sri Lanka Sri Lankan Peoples Technology
By Laksi Aug 14, 2024 01:39 PM GMT
Laksi

Laksi

இலங்கையர்களுக்கு வான் பரப்பில் செவ்வாய் - வியாழன் இணைவை அவதானிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வானது நாளை (15) காலை வானில் தென்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் ( Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

இரட்டைக் கோள்

அத்தோடு, இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் "இரட்டைக் கோள்" போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் நிகழவுள்ள மாற்றம் : இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு | Impending Change In The Airspace

இந்தநிலையில், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.

எனினும், இரவு வானில் சந்திரன் இணைவது பொதுவானது என்றாலும், இரு கோள்களுக்கு இடையே இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

அரிய இணைப்பு

செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு அரிய இணைப்பு இன்று (14) இரவு 8.57 மணி முதல் இரவு 9.51 மணி வரை நிகழும் ஆனால் அந்த நேரத்தில், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலான கோண தூரம் ஒரு டிகிரிக்கும் குறைவானது ஆகும்.

வானில் நிகழவுள்ள மாற்றம் : இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு | Impending Change In The Airspace

ஆனால் அந்த காலப்பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தொடுவானத்தில் இருந்து எழாததால் நாளை (15) அதிகாலை 2 மணிக்கு பின்னர் இலங்கையர்கள் இணைவதை அவதானிக்க முடியும்.

அந்த நேரத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே கோண வேறுபாடு 19' 29'' ஆக அதிகரிக்கும். இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் மக்கள் சிறப்பாகக் அவதானிக்க முடியும்.

இருப்பினும், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே இந்த வகையான இணைப்பு 2033 ஆம் ஆண்டில் மீளவும் சிறப்பாக அவதானிக்க முடியும் வானியல் துறை தெரிவித்துள்ளது.

சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை

சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW