மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் திட்டம்

CEB Sri Lanka IMF Sri Lanka Money Dollars
By Rakshana MA Mar 05, 2025 04:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம்(IMF) பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது.

இந்நிலையில் இத்திருத்தத்தின் ஊடாக மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் தெரிவித்துள்ளார்.

ரமழான் நாள் 3 : நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

ரமழான் நாள் 3 : நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

புதிய கட்டணம் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் திட்டம் | Imf Recommend To Increase Electricity Bill

குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மின்சாரசபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவகின்றது.

அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு மீணடும் சுமையாக அமையக் கூடும்.

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

நட்டம் அடையாத விலைத்திருத்தம் 

எனவே மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் திட்டம் | Imf Recommend To Increase Electricity Bill

நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலைபபொறிமுறைமையொன்று காணப்படுகின்றது. எனவே இந்த முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

கல்முனையில் செயற்படும் தீவிரவாத சிந்தனைக்குழு தொடர்பில் வெளியான தகவல்

கல்முனையில் செயற்படும் தீவிரவாத சிந்தனைக்குழு தொடர்பில் வெளியான தகவல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW