சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

By Rakshana MA Jul 14, 2025 04:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடுவதாக நேற்று(13) சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் வாள் வெட்டு சம்பவங்கள்...! பொறுப்பெடுக்க தயங்கும் பொலிஸ்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் வாள் வெட்டு சம்பவங்கள்...! பொறுப்பெடுக்க தயங்கும் பொலிஸ்

போதைப்பொருள் வியாபாரம்

இச்சோதனை நடவடிக்கையில் கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர்களாவர்.

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது | Ice Drug Bust In Sammanthurai

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட கையடக்க தொலைபேசி பணம் என்பன மீட்கப்பட்டதுடன் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டன.

மேலும், சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..!

முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..!

ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW