ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

Sri Lanka vehicle imports sri lanka Import Export
By Rakshana MA Jul 13, 2025 06:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மூலம் 2,141.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு, இலங்கையின் தைத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 1,961 மில்லியன் டொலர்கள் ஆக இருந்தது.

இதன்படி, இந்த ஆண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி வருமானத்தில் 180.7 மில்லியன் டொலர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவித்தல்

நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவித்தல்

ஆடை ஏற்றுமதி 

மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதம் அதிகரித்து, 5,350.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல் | Sri Lanka Apparel Exports Rise 2025

இதில், தைத்த ஆடைகளின் பங்களிப்பு மட்டும் 2,141.7 மில்லியனாக உள்ளது.

அதேவேளை, அமெரிக்கா விதித்த 30 சதவீத வரி, இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர்

தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர்

[XVJRLJN

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW