முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..!

Anura Kumara Dissanayaka President of Sri lanka Presidential Update
By Rakshana MA Jul 13, 2025 11:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதி தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு நிகழ்நிலை கருவியான ‘அநுர மீட்டர்’ அடிப்படையில் இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கட்டார் மீது ஈரான் தாக்குதல்...வெளியான ஆதாரங்கள்

கட்டார் மீது ஈரான் தாக்குதல்...வெளியான ஆதாரங்கள்

கொடுக்கப்பட்ட வாக்குறுதி..

இதில் சம்பாதிக்கும் போது செலுத்தும் (PAYE) வரி முறையை திருத்தியமைத்தது மட்டுமே நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..! | Anura Meter Tracks 2024 Promises

வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் manthri.lk வலைத்தளத்தால் இயக்கப்படும் அநுர மீட்டர், பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உயர் பொது நலன் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் 22 வாக்குறுதிகளை ஆராய்கிறது.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் வகை தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 5% ஐக் குறிக்கிறது, இந்த 22 வாக்குறுதிகளில் 35% ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் 14% தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த 22 வாக்குறுதிகளில் 10 ஆதாவது, 45% பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்று அநுர மீட்டர் தெரிவிக்கிறது.

இஸ்லாமிய ஆட்சி முறை அடக்குமுறையா....?

இஸ்லாமிய ஆட்சி முறை அடக்குமுறையா....?

ஏறாவூரில் கோர விபத்து..! உயிர் தப்பிய சாரதி

ஏறாவூரில் கோர விபத்து..! உயிர் தப்பிய சாரதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW