புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..!

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 02, 2024 06:21 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - எரம்புகொடல்ல மற்றும் கற்பிட்டி , கப்பலடி ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  

இந்த பீடி இலை பொதிகள் கடந்த 31 ஆம் திகதி மேற்குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து கொண்டிருந்த போதே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், புத்தளம் - எரம்புகொடல்ல களப்பு பகுதியில் 4 உர மூடைகளில் இருந்து 169 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

பீடி இலைகள் மீட்பு

இதேவேளை, கற்பிட்டி - கப்பலடி களப்பு பகுதியில் 5 உர மூடைகளில் இருந்து 176 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..! | Huge Amount Of Beedi Leaves Recovered In Puttalam

இவ்வாறு இரண்டு பிரதேசங்களிலும் ஒரே நாளில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது  345 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மேலதிக சட்ட நடவடிக்கை

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..! | Huge Amount Of Beedi Leaves Recovered In Puttalam

மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW