இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திற்கு (Department of Posts) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விநியோக செயற்பாடானது இன்றைய தினம் (02.09.2024) முன்னெடுக்கப்படவுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை 712,318 அரச ஊழியர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |