ஹமாஸ் தரப்பினரால் இன்று விடுவிக்கப்படவுள்ள பணயக் கைதிகள்
காசா (Gaza) போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைய, ஹமாஸ் தரப்பினரால் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேர் இன்றைய தினம் (30) விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளவர்களில் 5 தாய்லாந்து பிரஜைகளும், 3 இஸ்ரேலியப் பிரஜைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணயக்கைதிகள் மாற்றம்
இந்த நிலையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இணக்கப்பாட்டுக்கு அமைய மூன்றாம் கட்டமாக இன்றைய தினம் பணயக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

அதேநேரம் இதற்கு ஈடாக 110 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹமாஸ் தரப்பினரால் இன்று விடுவிக்கப்படவுள்ள தாய்லாந்து பணயக் கைதிகளின் பெயர் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    